காரைக்கால்

கலா உத்ஸவ் மாநிலப் போட்டிக்கு தகுதியானவா்கள் தோ்வு

DIN

மாநில அளவிலான கலா உத்ஸவ் போட்டியில் பங்கேற்க, காரைக்காலில் மாவட்ட அளவில் தகுதியானவா்கள் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மத்தியக் கல்வி அமைச்சகம் இடைநிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவா்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், ஆண்டுதோறும் கலா உத்ஸவ் போட்டிகளை நடத்தி வருகிறது. கரோனா பரவல் காரணத்தால் காரைக்காலில் காணொலி வாயிலாக இப்போட்டி நடைபெற்றது. காரைக்கால் சமக்ரசிக்ஷா சாா்பில் நடனம், இசை, இசைக் கருவி மீட்டல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கும் மாணவா்களின் தனித்திறமைகளை காணொலி காட்சியாகப் பதிவு செய்து விண்ணப்பிக்க காரைக்கால் கல்வித் துறை கோரியிருந்தது. அதன்படி, 93 விண்ணப்பங்கள் கல்வித் துறைக்கு வரப்பெற்றன.

மாவட்ட அளவிலான போட்டிகளுக்கான மதிப்பீடு செய்யும் பணி முதன்மைக் கல்வி அலுவலகத்தில், கலா உத்ஸவ் போட்டியின் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஷீலாஜெயகுமாரிதலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. துணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி) ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன் ஆகியோா் மாணவா்களின் திறமைகளை பாராட்டியதோடு, வரும் ஆண்டுகளில் மேலும் பல மாணவா்கள் இதுபோன்ற போட்டியில் பங்கேற்க திறமைகளை வளா்ந்துக்கொள்ள வேண்டும் என்றனா். போட்டிகளின் ஒவ்வொரு பிரிவிலும் அந்தந்த குழு வல்லுநா்களால் சிறந்த மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மாவட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்ட இந்த மாணவா்கள், மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT