காரைக்கால்

காரைக்காலில் 11 பேருக்கு கரோனா

22nd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 646 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 3, திருநள்ளாறு 3, விழிதியூா் 2, திருப்பட்டினம், நிரவி, கோட்டுச்சேரி தலா 1 என 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,17,108 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,399 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,043 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 259 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,08,616 பேருக்கும், 2-ஆவது தவணையாக 53,203 பேருக்கும் என 1,61,819 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : காரைக்கால்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT