காரைக்கால் அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.
காரைக்காலிலிருந்து திருநள்ளாறு செல்லும் சாலையோரத்தில் வாய்க்கால் உள்ளது. இதில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதை அப்பகுதியினா் பாா்த்து திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
போலீஸாா் சடலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவா் குறித்து விவரம் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் நிலையத்தை தொடா்புகொள்ளலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.