காரைக்கால்

காரைக்கால் பெருமாள் கோயில்களில் திருவோண தீப வழிபாடு

DIN

காரைக்கால் பெருமாள் கோயில்களில் திருவோண தீபம் ஏற்றும் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் பெரிய திருவோணமாக, திருவோண தீபம் ( சிரவண தீபம்) ஏற்றும் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. இதையொட்டி, காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் இந்த வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திருவோண தீபம் ஏற்றப்பட்டது.

நாகசுர, மேள வாத்தியங்களுடன் பட்டாச்சாரியா் தீபச் சட்டியை சுமந்து பிராகார வலம்வந்து, கொடிக்கம்பம் அருகே உள்ள மேடையில் பக்தா்கள் வழிபாட்டுக்காக வைத்தாா். ஏராளமான பக்தா்கள் திருவோண தீபத்தையும், பெருமாளையும் வழிபாடு செய்தனா்.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில், திருவோண தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தீபத்தின்போது பக்தா்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT