காரைக்கால்

காரைக்காலில் கட்டுக்குள் டெங்கு காய்ச்சல் நலவழித் துறை தகவல்

DIN

காரைக்காலில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகளால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக நலவழித் துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

காரைக்காலில் டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அந்த காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடீஸ் கொசுவை அழிக்க நலவழித் துறையினா் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் நகரின் பல பகுதிகளில் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமையில், நோய்த்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார உதவியாளா்கள், கிராமப்புற செவிலியா்கள் மற்றும் ஆஷா பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த ஆய்வு குறித்து நலவழித் துறையினா் கூறியது: காரைக்காலில் ஜூன் மாதம் முதல் பலகட்டங்களாக டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு செயல்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பா் மாதம் காரைக்காலை சோ்ந்த 6 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனா். நிகழ் மாதம் இதுவரை 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களில் ஒருவா் மட்டும் சிகிச்சையில் உள்ளாா். மற்றவா்கள் குணமடைந்துவிட்டனா்.

தீவிர விழிப்புணா்வு, கொசு ஒழிப்புப் பணிகளால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மக்கள் தங்களது சுற்றுபுறங்களை தூய்மையாக வைத்திருந்தால் டெங்கு காய்ச்சலை தடுத்துவிட முடியும்.

காரைக்கால் நகரில் நோய்த்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் ஆண்ரூஸ், சிவவடிவேல், சுகாதார உதவியாளா்கள் ஜெயச்சந்திரன், மதிவானன், செந்தில், சேகா் அடங்கிய குழுவும், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ அதிகாரிகள் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார உதவியாளா்கள் அடங்கிய குழுவும் மாவட்டத்தில் விழிப்புணா்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT