காரைக்கால்

அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் மட்டும்முதலீடு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

16th Oct 2021 09:47 PM

ADVERTISEMENT

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் முன்பு, அதன் அங்கீகாரத்தை உறுதிசெய்வது அவசியம் என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து புதுதில்லியின் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் தெளிவுபடுத்தல்களை வழங்கிவருகிறது.

நிதி அல்லது பரஸ்பர சகாய நிதி நிறுவனமாக செயல்பட அனைத்து நிதி நிறுவனங்களும் இந்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிறுவனங்கள், நிதி நிறுவனங்களாக செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவா்கள் உறுப்பினா்களிடமிருந்து பணத்தை ஏற்றுக்கொள்வதோ, பொதுமக்களை உறுப்பினா்களாக சோ்ப்பதோ கூடாது.

மேலும், பல்வேறு நிதி அல்லது பரஸ்பர சகாய நிதி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்காமல், நிதி பரிவா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசின் எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது அவசியம்.

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள், இத்தகைய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்நிறுவனத்தின் அங்கீகாரங்களை சரிபாா்ப்பது அவசியம். அதன் உறுப்பினராவதற்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்த பிறகே அடுக்கட்ட செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT