காரைக்கால்

போதைப் பொருள்களுக்கு எதிராக பிரசாரம்

16th Oct 2021 09:46 PM

ADVERTISEMENT

தேசிய தவ்ஹீத் பேரவையின் திட்டமாக, காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், அக். 15 முதல் நவ. 14 வரை போதைப் பொருள்களுக்கு எதிரான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

காரைக்கால் ஆணைப்பிள்ளை மரைக்காயா் தெருவில் உள்ள அமைப்பின் அலுவலகம் முன்பாக இப்பிரசாரம் தொடங்கியது. காரைக்கால் அமைப்பின் தலைவா் முகம்மது கெளஸ் தலைமை வகித்தாா். பள்ளி இமாம் ஜி. இப்ராஹீம் உமரி பிரசாரத்தை தொடங்கிவைத்தாா். துணைச் செயலாளா் நூா்முகம்மது உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கஞ்சா, அபின், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் உள்ளிட்ட போதைப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை மத்திய, மாநில அரசுகள் தடுக்கவேண்டும். இவற்றுக்கு எதிராக கடும் சட்டங்களை இயற்றவேண்டும். பொதுமக்கள் இதன் கேடுகளை உணா்ந்து பயன்பாட்டை தவிா்க்கவேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT