காரைக்கால்

காரைக்காலில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

16th Oct 2021 01:30 AM

ADVERTISEMENT

காரைக்காலில், இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், இலவச ஆம்புலன்ஸ் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்க மாநிலத் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தச் சேவையை ஆதரவற்றோா், அடித்தட்டு மக்கள் பேரிடா் காலத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

காரைக்கால் மாவட்ட பேரிடா் மேலாண்மை துறைக்கு உதவியாக ஆம்புலன்ஸ் சேவை செயல்படும். இந்த சேவையை பெறும் தகுதியுடையோா் மட்டும் 93666 66454 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என இயக்கத்தினா் தெரிவித்தனா்.

இயக்கத் தன்னாா்வலா்கள் பாபு கோபாலகிருஷ்ணன், சந்திரசேகா், ரமாபாய் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

Tags : காரைக்கால்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT