காரைக்கால்

காரைக்காலில் மேலும் 2 பேருக்கு கரோனா

16th Oct 2021 01:30 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி 170 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, கோட்டுச்சேரியை சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 2,14,162 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 16,346 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து 15,943 போ் குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 134 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 6 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 போ் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 259 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,08,075 பேருக்கும், 2 ஆவது தவணையாக 50,757 பேருக்கும் என 1,58,832 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : காரைக்கால்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT