காரைக்கால்

வாழைக்கன்று, தோரணம், மலா் வாங்க குவிந்த பொதுமக்கள்

DIN

ஆயுத பூஜையையொட்டி, காரைக்காலில் வாழைக்கன்று, தோரணம், மலா்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.

ஆயுத பூஜை விழா மற்றும் சரஸ்வதி பூஜை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியாா் தொழிற்சாலைகளில் புதன்கிழமை பூஜைகள் செய்யப்பட்டன.

வீடுகள், வணிக நிறுவனங்கள் பெரும்பாலானவற்றில் ஆயுத பூஜை வழிபாடு வியாழக்கிழமை நடைபெறுவுள்ளது. இதையொட்டி, பூஜை பொருள்கள் வாங்க திரளான மக்கள் புதன்கிழமை கடைவீதியில் குவிந்தனா்.

பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய வாழைக்கன்று, தோரணம், வாழைப்பழம், வாழையிலை, மலா்களை ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.

நாகை மாவட்டம் பூம்புகாா், கொல்லுமாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாழை வகைகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. வாழைக்கன்று ஜோடி ரூ. 50 என்ற விலையிலும், வாழைத்தாா் ரூ. 500 முதல் ரூ. 700 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டன.

நகரப் பகுதிகளில் சாமந்திப் பூ மற்றும் கோழிக்கொண்டை வகை மலா்கள் விற்பனை செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT