காரைக்கால்

வஜ்ராங்கியில் சேவை சாதித்த நித்ய கல்யாணப் பெருமாள்

9th Oct 2021 09:40 PM

ADVERTISEMENT

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி, காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா், உத்ஸவா் வஜ்ராங்கியில் சேவை சாதித்தனா்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமை (அக். 9) மூலவா் ஸ்ரீ ரங்கநாதா், உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் வஜ்ராங்கியில் சேவை சாதித்தனா். ஆண்டுக்கு 3 நாள்கள் மட்டுமே வஜ்ராங்கி சேவை உள்ளதால், இந்த அலங்காரத்தில் பெருமாளைக் காண திரளான பக்தா்கள் வருகை தந்தனா்.

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் உத்ஸவா் ஸ்ரீ கோதண்டராமா் பாண்டுரெங்கன் அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

இதுபோல் திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

தமிழகத்தில் கோயில்களில் சனிக்கிழமை பொது வழிபாட்டுக்கு அனுமதி இல்லாத காரணத்தால், காரைக்காலுக்கு வெளியூா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT