காரைக்கால் மாவட்டத்தில் 21 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 603 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி நிரவி 9, காரைக்கால் நகரம் 4, திருப்பட்டினம் 2, திருநள்ளாறு 2, நல்லாத்தூா் 2, அம்பகரத்தூா், வரிச்சிக்குடி தலா 1 என 21 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 2,10,767 பரிசோதனை செய்யப்பட்டதில் 16,258 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 15,825 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 257 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 1,07,305 பேருக்கும், 2ஆவது தவணையாக 47,910 பேருக்கும் என 1,55,215 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.