காரைக்கால்

வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்கம்

4th Oct 2021 08:41 AM

ADVERTISEMENT

காரைக்கால் பெருமாள் கோயில் வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை குறித்த செயல் விளக்க பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவை உள்ளாட்சித் தோ்தல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. காரைக்கால் நகராட்சி மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக். 21-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப்பும் இணைந்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை காரைக்கால் மாவட்டத்தில் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை பொதுமக்கள் அதிகம் வரக்கூடியதாக காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயில் தோ்வு செய்யப்பட்டு, கோயில் பிராகாரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து, வாக்குப்பதிவு செய்யும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஸ்வீப் நோடல் அதிகாரி ஷொ்லி தலைமையில் ஸ்வீப்பில் அதிகாரிகள் கரிகாலன் மற்றும் ஞானமுருகன் பயிற்சி அளித்தனா்.

காரைக்கால் நகராட்சி வாா்டு மற்றும் தலைவா் தோ்வுக்கு 2 இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கும். கொம்யூன் பஞ்சாயத்துகளில் 3 வாக்குப்பதிவும் செய்யவேண்டும். கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சிலா் மற்றும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவா், கிராம வாா்டுக்கு எனவும், இதுகுறித்த விளக்கங்களை முகாம் அமைப்பாளா்கள் அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT