காரைக்கால்

காரைக்காலில் 9 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

4th Oct 2021 08:40 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தொற்று {ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 299 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி நெடுங்காடு 3, காரைக்கால் நகரம் 2, திருநள்ளாறு 2 நிரவி, வரிச்சிக்குடி தலா 1 என 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,08,077 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,173 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 15,732 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காரைக்கால் நகரை சோ்ந்த 49 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு சா்க்கரை, இருதய நோய் இருந்தது. இதுவரை கரோனா தொற்றால் 257 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,06,574 பேருக்கும், 2-ஆவது தவணையாக 45,028 பேருக்கும் என 1,51,602 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT