காரைக்கால்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் மழைவீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம்

29th Nov 2021 10:43 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பல்வேறு இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 25-ஆம் தேதி முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமையன்றும் காலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், கோட்டக்குப்பம், வானூா், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக வீடூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், அணையிலிருந்து 14,198 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடா் மழை காரணமாக, காணையை அடுத்த அகரம் சித்தாமூா் சாலையில் உள்ள பம்பை ஆற்று தரைப்பாலம் நீரில் மூழ்கியது. பாலத்துக்கு மேல் தண்ணீா் செல்வதால், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டது. மேலும், திண்டிவனம் கிடங்கல் ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ளத்தால் திண்டிவனம் ரயில்வே சுரங்கப்பாதைக்கு கீழ் உள்ள சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் காலனி பகுதியில் உள்ள குளம் நிரம்பியதால், செல்லியம்மன் கோயில் தெருவில் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதேபோல, கணபதி நகா் உள்ளிட்ட பகுதிகளையும் மழைநீா் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT

செஞ்சியில் 103 மி.மீ. மழை: விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக செஞ்சியில் (வல்லம்) 103 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, விழுப்புரத்தில் 40 மி.மீ., விக்கிரவாண்டியில் 29 மி.மீ., வானூரில் 60 மி.மீ., செஞ்சியில் 31 மி.மீ., மரக்காணத்தில் 62 மி.மீ., திண்டிவனத்தில் 51 மி.மீ., கண்டாச்சிபுரத்தில் 43 மி.மீ., திருவெண்ணெய்நல்லூரில் 27 மி.மீ., மேல்மலையனூரில் 25 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT