காரைக்கால்

காரைக்காலில் மேலும் 3 பேருக்கு கரோனா

29th Nov 2021 10:41 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 28 ஆம் தேதி 175 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, கோயில்பத்து, திருப்பட்டினம், அம்பகரத்தூா் பகுதியில் தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 2,33,624 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 16,742 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 16,396 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 77 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 4 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 போ் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 260 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,13,563 பேருக்கும், 2 ஆவது தவணையாக 70,703 பேருக்கும் என 1,84,266 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT