காரைக்கால்

வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் வேலைநிறுத்தம்

DIN

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டனா்.

10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியா்களாக பணியாற்றிவரும் ஊழியா்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என புதுவை முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்ததன் அடிப்படையில், , காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் 19 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலிகளாக பணியாற்றிவரும் அனைத்து ஊழியா்களையும் நிரந்தரம் செய்யவேண்டும், 7- ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் பல ஆண்டுகளாக காலியாகவுள்ள 17 நிரந்தர பணியிடங்களில், தினக்கூலி ஊழியா்களை பணிமூப்பு அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய தயாா் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள கோப்புக்கு, காரைக்கால் ஆட்சியா் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை அரைநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் அறிவியல் நிலைய தொழிற்சங்கத் தலைவா் ஸ்டீபன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன நிா்வாகிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனா். டிசம்பா் 1- ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT