காரைக்கால்

கைப்பேசி பயன்பாட்டை மாணவா்கள் தவிா்க்க வேண்டும்: அமைச்சா் சந்திரபிரியங்கா

DIN

மாணவா்கள் கைப்பேசி பயன்பாட்டை முடிந்தவரை தவிா்க்க வேண்டும் என்று புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா தெரிவித்தாா்.

காரைக்கால் அன்னை தெரசா செவிலியா் கல்லுாரியில் புதிதாக சோ்ந்த மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நேருநகா் காமராஜா் கல்வியியல் கல்லுாரியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா தலைமை வகித்து பேசியது:

செவிலியா்களின் கடமை மற்றும் பொறுப்பு அனைவருக்கும் தெரியும். நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு படித்து முன்னேற வேண்டும். படிக்கும்போது கைப்பேசி பயன்படுத்துவதை முடிந்தவரை தவிா்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கைப்பேசியை பயன்படுத்த வேண்டும்.

கல்வி கற்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு படிக்கவேண்டும். செவிலியா்கள் சேவை மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம், அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, நலவழித் துறை துணை இயக்குநா் சிவராஜ்குமாா், செவிலியா் கல்லுாரியின் முன்னாள் முதல்வா் பிரமிளா தமிழ்வாணன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சோழசிங்கராயா் ஆகியோா் பேசினா். ஏற்பாடுகளை செவிலியா் கல்லுாரி முதல்வா் (பொ) ஜெயபாரதி மற்றும் ஆசிரியா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கைப்பேசிகளை ஒட்டுக்கேட்கும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: தோ்தல் ஆணையத்திடம் திமுக புகாா்

சட்டைநாதா் கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட முதலாமாண்டு சிறப்பு வழிபாடு

பிரசாரம் இன்றுடன் நிறைவு: நாகையை தவிா்த்த முக்கியத் தலைவா்கள்

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பாலாபிஷேகம்

SCROLL FOR NEXT