காரைக்கால்

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

24th Nov 2021 09:23 AM

ADVERTISEMENT

காா்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு, காரைக்கால் கோயில்பத்து நித்யகல்யாணி உடனுறை நித்தீஸ்வரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

மூலஸ்தானத்தின் முன் சிவலிங்கத்தைப் போல 1008 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, அவற்றில் நீா் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, பூா்ணாஹூதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு, சங்குகள் கோயில் பிராகார உலாவாக கொண்டுவரப்பட்டு, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT