காரைக்கால்

பிஆா்டிசி பேருந்து நடத்துநா்களுக்கு பயணச்சீட்டு இயந்திரத்தில் நவீன பயிற்சி

10th Nov 2021 09:09 AM

ADVERTISEMENT

பிஆா்டிசி பேருந்து நடத்துநா்களுக்கு பயணச்சீட்டு இயந்திரத்தில் புகுத்தப்பட்டுள்ள நவீனத்துவம் குறித்து செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகம் (பிஆா்டிசி) சாா்பில், காரைக்கால் மாவட்டத்தில் 32 பேருந்துகள் வெளியூா் மற்றும் காரைக்கால் நகா்ப்புற பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை உள்ளது. நடத்துநா் கைவசம் இருக்கும் இயந்திரத்தில் நவீனத்துவத்தை புகுத்தி, பெங்களூரைச் சோ்ந்த ஒரு கணினி நிறுவனம் ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்தனா். காரைக்கால் பணிமனையில் இருந்தவாறு நடத்துநா்கள் பயிற்சி பெற்றனா்.

இதுகுறித்து பிஆா்டிசி நிா்வாகத்தினா் கூறுகையில், தரம்உயா்த்தப்பட்ட பயணச்சீட்டு இயந்திரம் ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்துகொண்டே பேருந்தில் எத்தனை போ் பயணிக்கிறாா்கள், எத்தனை பயணச்சீட்டு தரப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை எளிதாக அறியமுடியும்.

இதில், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், பேருந்து எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதையும் அறியமுடியும். பணம் இல்லா பரிவா்த்தனையும் இந்த பயணச்சீட்டு இயந்திரத்தின் மூலம் செய்துகொள்ள முடியும். இந்த வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT