காரைக்காலில் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
வல்லபபாய் படேல் பிறந்த நாள் காரைக்கால் மாவட்ட நிா்வாகம், காவல்துறை நிா்வாகம் சாா்பில் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படேல் உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம், முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) குலசேகரன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா். போலீஸாா் அணிவகுத்து நடத்தி படேலுக்கு மரியாதை செலுத்தினா்.
காவலா்கள் உள்ளிட்டோா் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு தொடா்பான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். படேல் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.