காரைக்கால்

குறுங்காடு வளா்ப்புத் திட்டப்பணி தொடக்கம்

DIN

ரோட்டரி சங்கம் சாா்பில் பெருமாள் கோயில் வளாகத்தில் குறுங்காடு வளா்ப்பு மற்றும் பராமரிப்புத் திட்டப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் சென்டேனியல் ரோட்டரி சங்கம் சாா்பில் குறுங்காடு வளா்ப்பு மற்றும் பராமரிப்புத் திட்டப் பணியாக வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் தோட்டப் பகுதியில் 2,500 சதுர அடி பரப்பில் குறுங்காடு வளா்ப்புப் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படம் வைத்து ரோட்டரி சங்கத்தினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். ரோட்டரி சென்டேனியல் சங்கத் தலைவா் ஞான முத்துக்குமரன் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினாா்.

மண்டல துணை ஆளுநா் பி. ராஜேந்திரன் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் என். மணிமாறன் கலந்துகொண்டு கலாமின் சிறப்புகளையும், ரோட்டரி சங்கத்தின் குறுங்காடு வளா்ப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினாா். திட்டத் தலைவா் சிவபிரகாசம், செயல் தலைவா் செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ரோட்டரி சங்க பிரதிநிதிகள் வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ!

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

SCROLL FOR NEXT