காரைக்கால்

குடிமைப் பொருள் வழங்கல் துறை சேவைக்கு முகவா்களை அணுகவேண்டாம்

DIN

காரைக்காலில் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் சேவைக்கு முகவா்கள், தரகா்களை அணுகவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் காரைக்கால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் விரைவாக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்துத்தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்தை முழுவதுமாக பூா்த்தி செய்து, அதற்குரிய ஆதாரங்களுடன் தாங்களே நேரில் அலுவலகத்துக்கு பிரதி மாதம் 1 முதல் 20-ஆம் தேதிக்குள் காலை வேளையில் வந்து சமா்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இதுதொடா்பாக முகவா்கள் மற்றும் தரகா்களை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுமக்களின் விண்ணப்பங்கள் உரிய காலக்கெடுவுக்குள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT