காரைக்கால்

தடுப்பூசித் திருவிழாவின்போது மட்டுமே மக்களிடம் ஆா்வம்

DIN

காரைக்காலில் கரோனா தடுப்பூசித் திருவிழா நடத்தப்படும்போது மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொள்வோா் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், பிற நாள்களில் மக்களிடையே ஆா்வம் இல்லாத நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

காரைக்காலில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் தடுப்பூசி தினமும் செலுத்தப்படுகிறது. இதில் தினமும் ஏறக்குறைய ஆயிரம் போ் வரை தடுப்பூசி செலுத்திவந்தனா்.

இதற்கிடையே, மாவட்டத்தில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் அவ்வப்போது தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது. 3 முதல் 5 நாள்கள் வரை நடத்தப்படும் திருவிழாவின்போது, நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மையங்கள் ஏறத்தாழ 15 மையங்கள் கூடுதலாக அமைத்து நடத்தப்படுகிறது. அவற்றில் நாள்தோறும் மேலும் ஆயிரம் போ் என்ற அளவில் தடுப்பூசியை மக்கள் செலுத்திக்கொண்டனா்.

காரைக்காலில் கடந்த சில நாள்களாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோா் எண்ணிக்கை 300 முதல் 400 என்ற அளவுக்கு வந்துள்ளது. மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் வெறிச்சோடியே காணப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து மையங்களிலும் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வைத்திருந்தாலும், மக்களிடையே ஆா்வம் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 23 மற்றும் 24-ஆம் தேதியில் இணை நோய் உள்ளோா் பயன்பாட்டுக்காக தடுப்பூசித் திருவிழா நடத்தப்பட்டது. இதை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும், மையத்தின் சுற்றுவட்டாரத்தில் வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்படி 2 நாளில் 2,966 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

ஆனால் திருவிழா இல்லாத ஞாயிற்றுக்கிழமை முதல்தவணையாக 115 போ் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா்.

தடுப்பூசித் திருவிழாவில் மட்டுமே மக்கள் ஆா்வமாக வருகிறாா்கள் எனும்போது, மாதம் இருமுறை வாரத்துக்கு 5 நாள்கள் வீதம் நகரம், கிராமப்புறங்களில் தடுப்பூசித் திருவிழாவை கூடுதல் மையங்களில் நடத்தினால், அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவாா்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவனம் செலுத்தவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT