காரைக்கால்

காரைக்காலில் ஆதிதிராவிடா், பழங்குடியின கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

காரைக்காலில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் மாவட்ட அமைப்பின் சாா்பில் பேருந்து நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் கே. பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி மாணவா்களின் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவச கல்வித் திட்டத்தை அமலாக்கவேண்டும். இலவச கல்வித் திட்டத்தை அமலாக்காத தனியாா் கல்வி நிறுவனங்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். எஸ்சி., எஸ்டி மக்களுக்கான சிறப்புக்கூறு துணை திட்ட நிதியை வேறு துறைகளுக்கு மாற்றக்கூடாது. எஸ்சி, எஸ்டி துறைசாா் திட்டத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுவை மாநிலத் தலைவா் வி.ஜி. நிலவழகன், செயலாளா் ஜி. ராமசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் கூட்டமைப்பின் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT