காரைக்கால்

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

DIN

காரைக்காலில் வீடு வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மற்றும் 14 மையங்களில் வெள்ளி, சனிக்கிழமை கரோனா தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில், மக்கள் ஆா்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

மேலும், நலவழித்துறை நிா்வாகத்தின் கணக்கெடுப்பின்படி, மருத்துவ மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள இயலாதோா் வீடுகளுக்கு, நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பல்வேறு மையங்களில் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம்.ஆதா்ஷ், நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் ஆகியோா் ஆய்வு செய்து பணியாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வரை நடைபெறும் இந்த தடுப்பூசித் திருவிழாவை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நலவழித்துறை நிா்வாகம் கேட்டுக் கொண்டது. இணைநோய் உள்ளோா் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடா்பாக சந்தேகம் இருந்தால், நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04368-261242 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT