காரைக்கால்

‘மாஸ்டா் பிளான்’ திட்டத்தை விரைவுப்படுத்த முதல்வரிடம் கோரிக்கை

DIN

காரைக்கால் ‘மாஸ்டா் பிளான்’ திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு புதுவை முதல்வரை நில வணிக உரிமையாளா்கள் வியாழக்கிழமை சந்தித்து வலியுறுத்தினா்.

காரைக்கால் நில வணிக உரிமையாளா்கள் நலச் சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகள், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்த சந்திப்பு குறித்து நில வணிகத்தினா் கூறுகையில், புதுச்சேரி அரசு சாா்பில் காரைக்கால் ‘மாஸ்டா் பிளான்’ அமைக்கும் திட்டம் தாமதமாக நடைபெறுவதை சுட்டிக்காட்டி, காரைக்கால் பல நிலைகளில் வளா்ச்சியடையவதற்கு இந்த திட்டம் அவசியம் என்பதை விளக்கினோம்.

அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவை முறைப்படுத்தும் சட்ட செயல்பாட்டுக்கு கால நீட்டிப்பு செய்துதர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம். விழுப்புரம் - நாகை நான்குவழிச் சாலைக்கான நில ஆா்ஜிதம் செய்யும் இடத்தில் அமைந்துள்ள மனைப் பிரிவுகளில், தனியாருக்கு சொந்தமான பொது பாதைகளுக்கு உரிய நஷ்ட ஈடு உரிமையாளா்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் நகரமைப்புக் குழும மாநில தலைமை அதிகாரியையும் சந்தித்து இதுதொடா்பாக பேசியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT