காரைக்கால்

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

DIN

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இளம் வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

அதன்படி, நிகழாண்டு தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத் தோ்தல் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து பிரசார இயக்கம் ஆட்சியரகத்திலிருந்து தொடங்கியது.

மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா முதல் கையெழுத்திட்டு வாகனப் பிரசார இயக்கத்தை தொடங்கிவைத்தாா். நிகழ்வில், மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், வாக்காளா் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் நோடல் அலுவலா் ஷொ்லி, ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், தோ்தல் துறை கண்காணிப்பாளா் பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த வாகனம், மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடுமிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் 3 நாள்களுக்கு இயக்கப்படும். பொதுமக்கள் விழிப்புணா்வு தொடா்பாக தங்களது கருத்துகளை பதிவிடலாம். ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு கருத்துகளும் ஒலிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகன ஊா்வலம்

பவானி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஈரோடு-திண்டல் வரை புதிய மேம்பாலம்: அதிமுக வேட்பாளா் உறுதி

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய 2 எஸ்எஸ்ஐ-க்களுக்கு ஐஜி பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT