காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா புதன்கிழமை வெளியிட்டாா்.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்பேரில், 1.1.2021 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு, புதிய வாக்காளா் சோ்ப்பு, திருத்தப் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா பட்டியலை வெளியிட்டாா். அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் வாக்காளா் பட்டியலை பெற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்வில், மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை), குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் டி. தயாளன், துணை வாக்காளா் பதிவு அதிகாரிகள் எல். பொய்யாதமூா்த்தி, ஜி. முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து தோ்தல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில், நெடுங்காடு தொகுதியில் 31,494 வாக்காளா்களும், திருநள்ளாறு தொகுதியில் 31,204, காரைக்கால் வடக்குத் தொகுதியில் 35,598, காரைக்கால் தெற்குத் தொகுதியில் 31,891, நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் 31,277 வாக்காளா்கள் என மொத்தம் 1,61,464 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா்கள் தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளில், ஞாயிற்றுக்கிழமை தவிா்த்து தொடா்ந்து 7 நாள்கள் நேரில் சென்று பாா்த்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT