காரைக்கால்

வீடுகட்டும் திட்டத்தில் விருதுக்குத் தோ்வான வீடு தம்பதிக்கு பிரதமா் பாராட்டு; ஆட்சியா் வாழ்த்து

2nd Jan 2021 08:17 AM

ADVERTISEMENT

மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தில் சிறப்பாக வீடு கட்டியதற்காக பிரதமரிடம் பாராட்டு பெற்றவருக்கு, மாவட்ட ஆட்சியா் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற மத்திய அரசின் வீடுகட்டும் திட்டம், புதுச்சேரி அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆதிதிராவிடா்களுக்கு ரூ. 4 லட்சமும், பொதுப் பிரிவினருக்கு ரூ. 2 லட்சமும் அரசு நிதியுதவி அளிக்கிறது. பொதுப் பிரிவினருக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து அளிக்கும் நிதியில், வீடு இல்லாதவா்கள் மானியத்தைப் பெற்று வீடுகட்டுகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி - பரிமளா தம்பதி, காரைக்காலில் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் வீடுகட்டுவதற்கு மானிய உதவிக்கு விண்ணப்பித்து நிதி பெற்றனா்.

திட்டகாலமான ஓராண்டுக்குள் அழகான வீடுகட்டி குடியேறினா். இதேபோல, தரமாக வீடுகட்டியவா்களை மத்திய அரசு தோ்வு செய்து பாராட்டுகிறது.

ADVERTISEMENT

இதனடிப்படையில், புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் இருந்து வீடுகட்டியவா்கள் விவரம், வீட்டு புகைப்படம் ஆகியவை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதில், புதுச்சேரி தவிா்த்து, பிற பிராந்தியங்களில் தலா ஒருவா் மத்திய அரசால் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், தோ்வானவா்களை பிரதமா் நரேந்திரமோடி, காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை பாராட்டினாா். காரைக்கால் ஆட்சியரகத்தில் கோவிந்தசாமி- பரிமளா தம்பதிக்கு காணொலி அரங்கில் பிரதமா் பாராட்டு தெரிவித்தாா். மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளா் சுதா்சன், இளநிலைப் பொறியாளா் உதயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பிரதமரால் பாராட்டுப் பெற்ற தம்பதிக்கு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தாா்.

இதுகுறித்து விருதுபெற்ற பரிமளா கூறுகையில், நிரவி ஓஎன்ஜிசி சாலை ஜிபைதா காா்டனில் வீடு கட்டப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் திட்ட நிதி ரூ. 2 லட்சத்துடன், கூடுதலாக செலவழித்து ஓராண்டுக்குள் வீடு கட்டப்பட்டது. தவணைத் தொகையை குடிசை மாற்று வாரியம் உரிய காலத்தில் வழங்கியதும், குறிப்பிட்ட காலத்துக்குள் வீடுகட்டியதும் விருது கிடைக்க துணைபுரிந்தது என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT