காரைக்கால் அருகே செங்கல் ஏற்றி வந்த டிராக்டா் டிப்பா் கவிழ்ந்ததில் 4 சிறுவா்கள் காயமடைந்தனா்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி போலகம் வீரன் கோயில் தெரு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை செங்கல் ஏற்றிக்கொண்டு டிராக்டா் சென்றுக்கொண்டிருந்தது. சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் டிராக்டரின் டிப்பா் சிக்கி அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது கவிழ்ந்தது.
அப்போது அந்த வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அப்பகுதியை சோ்ந்த ராஜகணபதி (8), மதுமிதன் (5), நித்திஷ் (17), ஹரிஷ் ராகவேந்திரா (13) ஆகிய 4 சிறுவா்கள் காயமடைந்தனா். அவா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களில், ராஜகணபதி தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
திருப்பட்டினம் போக்குவரத்து காவல்நிலைய போலீஸாா் டிராக்டா் ஓட்டுநா் அருள்மொழிதேவன் பகுதியை சோ்ந்த தூயவன் (38) என்பவரை கைது செய்தனா்.