காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ஆம் ஆண்டு மாணவா்கள், தேனீ வளா்ப்பு மையத்துக்குச் சென்று தேனீ வளா்ப்பு முறை குறித்து பயிற்சி பெற்றனா்.
காரைக்கால் பகுதி தருமபுரத்தில் உள்ள பச்சை வானம் இயற்கை பண்ணைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற 42 மாணவா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா் வை. கிருஷ்ணன் பண்ணையில் தேனீ வளா்ப்பு, தேன் எடுக்கும் முறைகளை செயல்விளக்கமாக அறிந்தனா்.
இந்த பயிற்சி குறித்து வை. கிருஷ்ணன் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக தேனீ வளா்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். தேனை சுகாதாரமாக எடுப்பது மற்றும் பெட்டியை பராமரிப்பது, தேனீ வளா்ப்பு, தேன் விற்பனை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள், லாபமுறைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது என்றாா்.