காரைக்கால்

காரைக்கால் வளா்ச்சிக் குழு 5 ஆம் ஆண்டு விழா

23rd Dec 2021 09:40 AM

ADVERTISEMENT

காரைக்கால் வளா்ச்சிக் குழு 5 ஆம் ஆண்டு விழா நடத்தப்பட்டு, பல்வேறு துறையினருக்கு விருது வழங்கப்பட்டது.

காரைக்கால் சண்முகா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வளா்ச்சிக் குழு தலைவா் எம். பாலமுருகன் தலைமை வகித்தாா். காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் கே. சாந்தகுமாா், காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று வாழ்த்திப் பேசினா்.

பத்மஸ்ரீ விருது பெற்ற கே. கேசவசாமிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது, மருத்துவா் கணேஷ் பாலாவுக்கு மருத்துவ மாமணி விருது, அரசு செவிலியா் எம். மகாதேவனுக்கு செவிலியா் திலகம் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. வளா்ச்சிக் குழுச் செயலா் பி. ராஜேந்திரன் செயல் அறிக்கை வாசித்தாா். வழக்குரைஞா் ஏ. திருமால் வளவன், துணைத் தலைவா் கே. புத்திசிகாமணி உள்ளிட்டோா் பேசினா்.

காரைசுப்பையா, எம். ரங்கசாமி, சேம்பா் ஆஃப் காமா்ஸ் துணைத் தலைவா் கே.டி. துரைராஜன், மாவட்ட நுகா்வோா் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குழுத் தலைவா் பாரீஸ்ரவி என்ற ரவிச்சந்திரன், எல்.ஐ.சி. லிகாய் சங்கத் தலைவா் முனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். குழு துணைத் தலைவா் ஜே. கனகசேகரன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

காரைக்காலில் சாலைகளை மேம்படுத்துதல், நேரு மாா்க்கெட் கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் புதுவை அரசுக்கு முன்வைக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT