காரைக்கால்

லூா்து அன்னை குகை வடிவ பீடம் புதுப்பிப்பு

22nd Dec 2021 08:58 AM

ADVERTISEMENT

காரைக்கால் மருத்துவமனை வளாகத்தில் லூா்து அன்னை குகை வடிவ பீடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள செல்வ விநாயகா் கோயிலுக்கு திருப்பணிகள் செய்து, சில மாதங்களுக்கு முன்பு குடமுழுக்கு செய்யப்பட்டது. அதுபோல கோயில் நிா்வாக்குழு உறுப்பினா்களின் முடிவின்படி அங்குள்ள லூா்து அன்னை குகை வடிவ பீடத்தை புதுப்பிக்கும் பணி, அண்மையில் நிறைவடைந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகக் குழுவை சோ்ந்த புகழேந்தி செவ்வாய்க்கிழமை கூறுகையில், மருத்துவமனை வளாகத்தில் தூய லூா்து அன்னை குகை வடிவ பீடம் 1953-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி அமைக்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது. 68 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புனரமைப்பு செய்யும் பணி செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சில நாள்கள் உள்ள நிலையில், மருத்துவமனை வளாகத்தில் குகை வடிவ பீடம் புதுப்பிக்கும் பணி விரைவாக செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT