சிறந்த நிா்வாக வார விழாயொட்டி கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி காரைக்காலில் டிச. 20 முதல் 26-ஆம் தேதி வரை சிறந்த நிா்வாக வார விழா நடைபெறுகிறது. இதில் காரைக்கால் மாவட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் வகையில், கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை சாா்பில் நல்லாட்சி - அரசிடமிருந்து மக்கள் எதிா்பாா்ப்பு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் (பொ) எம். ஆதா்ஷ், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி கே. ராஜசேகரன் ஆகியோா் போட்டி மையத்தை பாா்வையிட்டனா்.
போட்டியில் 34 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில் வெற்றிபெற்றவா்களுக்கு வார விழா நிறைவில் பரிசுகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. பள்ளி ஆய்வாளா்கள் பொன். செளந்தரராசு, கே.பால்ராஜ், ஆசிரியா்கள் ஆ. ஷீலா, ஜெயக்குமாரி ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.