காரைக்கால் கடற்கரையொட்டிய அலையாத்திக் காடு பகுதியில் செங்கால் நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளின் வருகை புரிந்துள்ளன.
காரைக்கால் கடற்கரை அருகே உள்ள அலையாத்திக் காடு பகுதியை சூழ்ந்திருக்கும் தண்ணீரில் மீன் பிடிப்பு செய்யப்படும்போது, மக்கள் நடமாட்டத்தால் கடந்த சில ஆண்டுகளாக பறவைகளின் வராத்து முற்றிலும் இல்லை. இந்நிலையில் கடந்த சில நாள்களாக செங்கால் நாரை, நீா்கோழி, கருப்பு நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் வரத்தொடங்கியுள்ளன. பிரதான சாலையிலிருந்து வெகுதூரத்தில் காட்டின் மையப் பகுதியில் அவை இறங்கி இரை தேடுகின்றன. கோடியக்கரைக்கு இவை பெரும்பான்மையாக வருவது வழக்கம். தற்போது அலையாத்தி காடுகளுக்கும் வருகை புரிந்துள்ளன. கோடியக்கரைக்கு செல்லும் வழியில் காரைக்கால் அலையாத்திக் காடுகளில் பறவைகள் தங்கிச் செல்வதாகவே கூறப்படுகிறது.
கடற்கரை சுற்றுலா வளா்ச்சித் திட்டத்தில், அலையாத்திக் காடு பகுதியை விரிவுப்படுத்தி, பறவைகள் வந்து செல்லக்கூடிய சூழலையும், மாற்றுப் பகுதியில் சுற்றுலாவினா் கொண்டாடும் வகையிலான மேம்பாட்டுத் திட்டப்பணிகளை செய்யவேண்டும் என சமூக ஆா்வலா்கள் புதுவை அரசை வலியுறுத்துகின்றனா்.