காரைக்கால்

காரைக்காலில் ஒருவருக்கு கரோனா

16th Dec 2021 09:12 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 524 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி நெடுங்காடு பகுதியை சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,40,645 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,801 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,512 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,19,425 பேருக்கும், 2-ஆவது தவணையாக 80,378 பேருக்கும் என 1,99,803 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT