காரைக்கால்

பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் முகப்பு மண்டப கட்டுமானப் பணி தொடக்கம்

9th Dec 2021 09:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் ஸ்ரீ பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் வாயிலில் முகப்பு மண்டபம் கட்டும் பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் வகையறாவை சோ்ந்த ஸ்ரீ பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்குக்காக திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இக்கோயில் கோபுர வாயில் பகுதியில் பிரதான மாதா கோயில் சாலையில் முகப்பு மண்டபம் கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு, சில காரணங்களால் தடைப்பட்டுப் போனது.

இப்பணியை மீண்டும் தொடங்க கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்த நிலையில், கட்டுமானம் தொடக்கத்துக்கான பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, சிவசங்கரன் (புதுச்சேரி), நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே.அருணகிரிநாதன் மற்றும் கைலாசநாதா் கோயில் அறங்காவல் வாரியத்தினா் மற்றும் பாஜகவினா், பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கோயில் முகப்பு மண்டபம் கட்டுமானம் சுமாா் ரூ. 25 லட்சம் செலவில் நடைபெறவுள்ளதாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT