காரைக்கால்

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

9th Dec 2021 08:59 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 510 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோயில்பத்து 2, காரைக்கால் நகரம், அம்பகரத்தூா் தலா 1 என 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,37,383 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,777 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,478 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,17,447 பேருக்கும், 2-ஆவது தவணையாக 77,340 பேருக்கும் என 1,94,787 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT