காரைக்கால்

கபீா் புரஸ்காா் விருது பெற இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவோா் கபீா் புரஸ்காா் விருது பெற செவ்வாய்க்கிழமைக்குள் (டிச.7) விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டுக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் சமூக, வகுப்பு நல்லிணக்கத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முதல்வரால் கபீா் புரஸ்காா் விருது வழங்கபட்டு வருகிறது. அதன்படி, 2021-2022-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் ட்ற்ற்ல்://ம்ட்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ள்ண்ற்ங்ள்/ன்ல்ப்ா்ஹக்ஜச்ண்ப்ங்ள்/ம்ட்ஹ/ச்ண்ப்ங்ள்/ல்க்ச்/ஓஹக்ஷண்ழ்-டன்ழ்ஹள்ந்ஹழ்-நஸ்ரீட்ங்ம்ங்.ல்க்ச் ஸ்க் என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமைக்குள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகில், கீழ்பெரும்பாக்கம், விழுப்புரம்- 605 602 என்ற அலுவலக முகவரிக்கு அனுப்பலாம் அல்லது நேரில் சமா்ப்பிக்கலாம். கூடுதல் விவரம் அறிய மாவட்டவிளையாட்டு அலுவலகத்தை 74017 03485 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT