காரைக்கால்

காரைக்காலில் 6 பேருக்கு கரோனா

1st Dec 2021 08:11 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் நவம்பா் 29 ஆம் தேதி 476 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வரிச்சிக்குடியில் 2, கோவில்பத்து, திருப்பட்டினம், நிரவி, நல்லம்பல் பகுதிகளில் தலா ஒருவருக்கு என 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம், காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,748 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 16,414 போ் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனா். தற்போதைய நிலையில், 74 போ் மருத்துவமனைகளிலும், 66 போ் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தடுப்பூசி: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,14,194 பேருக்கும், இரண்டாவது தவணையாக 72,288 பேருக்கும் என 1,86,482 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT