காரைக்கால்

காரைக்காலில் பனை விதைகள் நடும் பணி

1st Dec 2021 08:17 AM

ADVERTISEMENT

காரைக்கால் புறவழிச் சாலையில் பனை விதைகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கீழகாசாகுடி அருகே புறவழிச் சாலையோரங்களில், மாவட்ட துணை ஆட்சியா் எஸ். பாஸ்கரன் தலைமையில் 300 பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், வருவாய்த் துறை அதிகாரி கமலஹாசன், அக்குபஞ்சா் மருத்துவா் மோகன்ராஜன், குடிமை பாதுகாப்பு படையினா் உள்ளிட்டோா் பங்கேற்று பனை விதைகளை நடவுசெய்தனா்.

புதுச்சேரி ஃபெட்காட் இந்திய நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் பனை விதைகள் அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT