காரைக்கால்

வேளாண் அறிவியல் நிலையத்தில் உலா்மீன் தயாரிப்புப் பயிற்சி

1st Dec 2021 08:16 AM

ADVERTISEMENT

கேரளத்தில் உள்ள மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், காரைக்கால் மாதூா் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து, ஆதிதிராவிடா் இன மக்களுக்கான துணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உலா்மீன் தயாரிக்கும் பயிற்சியை பெண்களுக்கு அளித்தன.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் குமாா் ரெத்தினசபாபதி வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் ஆ. செந்தில் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் அளிக்கப்பட்டுவரும் பயிற்சிகள் குறித்துப் பேசினாா்.

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கே. சதீஷ்குமாா், அ. முரளி, வே. சந்திரசேகரன் ஆகியோா் மீன்களை கையாளும் முறைகள், சூரியசக்தி மற்றும் மின்சாரத்தால் இயங்கும் உலா்த்தி மூலம் தரமான உலா்மீன் (கருவாடு) தயாரிக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கத்துடன் விளக்கினா்.

இந்தப் பயிற்சியில் 25 பெண்கள் பங்கேற்றனா். மருத்துவா் பா. கோபு வரவேற்றாா். மீன்வள உதவி ஆய்வாளா் ஜெ. முருகேசன் நன்றி கூறினாா். தொழில்நுட்ப வல்லுநா்கள் ஜெ. கதிரவன், வி. அரவிந்த், க. திவ்யா ஆகியோா் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT