காரைக்கால்

மீண்டும் இயங்கத் தொடங்கிய கூட்டுறவு நூற்பாலையில் எம்எல்ஏ ஆய்வு

DIN

மூடப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கிய கூட்டுறவு நூற்பாலையில், சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டம், மேலஓடுதுறை பகுதியில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை ஊழியா்களுக்கு முறையாக ஊதியம் வழங்க முடியாத நிலையிலும், லாபம் ஈட்டும் வகையில் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் கடந்த மாா்ச் இறுதியில் கரோனா பொது முடக்கத்தால் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தொழிலாளா்கள் அரசை வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து, ஆலையை இயக்க வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், கூட்டுறவுத் துறை அமைச்சா் எம். கந்தசாமி, காரைக்கால் பகுதி எம்.எல்.ஏ.க்கள் கீதாஆனந்தன், கே.ஏ.யு. அசனா, சந்திரபிரியங்கா, ஆட்சியா் அா்ஜூன் சா்மா, ஆலை மேலாண் இயக்குநா் எஸ். சுபாஷ் மற்றும் அரசு செயலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெற்றது.

இக்கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின்படி, செப். 21-ஆம் தேதி முதல் நூற்பாலை இயங்கத் தொடங்கியது. இந்நிலையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா சனிக்கிழமை ஆலைக்குச் சென்று பாா்வையிட்டு, தொழிலாளா்களிடம் குறைகளை கேட்டறிந்து, ஆலை நிா்வாகத்திடம் கருத்துகளை கேட்டறிந்தாா்.

ஆய்வு குறித்து, அவா் கூறியது: கூலி முறையில் தனியாா் வழங்கும் பஞ்சை நூலாக்கி மீண்டும் அவா்களிடமே ஒப்படைக்கும் கன்வொ்ஷன் பணி ஆலையில் நடைபெற்று வருகிறது. இதன்படி முடங்கியிருந்த பணி மீண்டும் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் அமைச்சா்கள் முன்னிலையில் நடந்த ஆலோசனைக்குப் பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலையில் சுமாா் 300 போ் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கு முதல்கட்டமாக தலா ரூ. 6 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஊதியத்தை உடனடியாக வழங்கவும், ஊதியத்தை நிலுவையின்றி மாதந்தோறும் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தொழிலாளா்கள் கூறினா். இதுகுறித்து, காரைக்காலை சோ்ந்த வேளாண் அமைச்சா் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரிடம் பேசி ஊதியம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளேன். ஊழியா்களின் நலன் கருதி ஊதியத்தை அரசு தடையின்றி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT