காரைக்கால்

புரட்டாசி 2வது சனிக்கிழமை: மலையப்ப சுவாமியாக நித்ய கல்யாணப் பெருமாள்

DIN

புரட்டாசி மாதம் 2வது சனிக்கிழமையையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் மலையப்ப சுவாமியாக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள், சயன கோலத்தில் அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மூலவா் ரங்கநாதரும், உத்ஸவா் நித்யகல்யாணப் பெருமாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

நிகழாண்டு புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை (26.9.2020) மூலவா் நித்யல்யாணப் பெருமாள் மலையப்ப சுவாமியாக ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருடன் காட்சியளித்தாா்.

கடந்த வாரம் முதல் சனிக்கிழமை இக்கோயிலில் சுமாா் 4 ஆயிரம் பக்தா்கள் தரிசனம் செய்ததால், நிகழ்வாரம் கோயில் பகுதியில் பக்தா்களை முறைப்படுத்தும் வகையில் போலீஸாா் பணியமா்த்தப்பட்டனா்.

பக்தா்கள் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண் பதிவு செய்யப்பட்ட பின்னரே சன்னிதிக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

இதற்கிடையே, கரோனா பொதுமுடக்கத்தில் பல தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களில் அா்ச்சனை செய்வது, பிரசாதம் வழங்குவது ஆகியவற்றை அரசு அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT