காரைக்கால்

நடமாடும் கரோனா பரிசோதனை முகாமை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு

DIN

காரைக்காலில் வீடுதேடி வரும் நடமாடும் கரோனா பரிசோதனை முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள நலவழித் துறை அழைத்து விடுத்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கும் பணியை நலவழித் துறை அதிகரித்துள்ளது. அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் ஒரு இடத்தில் மட்டும் கரோனாவை உறுதிப்படுத்துவதற்கான மாதிரி எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம் அமைத்து மாதிரி எடுக்கும் பணியை சுழற்சி முறையில் செய்து வருகிறது. மேலும், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கே நடமாடும் பரிசோதனைக் குழுவினா் நேரடியாக சென்று, பரிசோதனை செய்துவருகின்றனா்.

காரைக்காலில் கரோனா பரவலை குறைக்கும் வகையில் எடுக்கப்படும் மாதிரி சேகரிப்புப் பணியில், பொதுமக்கள் தாமாக முன்வந்து மாதிரி அளித்து பயனடையவேண்டும் என நலவழித் துறை சமூக வலைதளங்கள் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, நலவழித் துறையினா் சனிக்கிழமை கூறியது: காரைக்காலில் ஆா்டிபிசிஆா் முறை, ரேபிட் ஆன்டிஜன் முறை என இரு முறையில் கரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்கும் பணி நடைபெற்று வருகின்றன. பரிசோதனை அதிகரித்திருப்பதால், தொற்றாளா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. வீடுதேடிச் செல்லும்போது பெரும்பாலான இடங்களில் மக்கள் ஆா்வமாக வந்து மாதிரி அளிக்கின்றனா். சிலரை அழைக்கவேண்டியுள்ளது. சிலா் பிரச்னை செய்கின்றனா். தொற்று இருப்பது உறுதியானால் அதற்கான சிகிச்சை முறைகளில் ஈடுபடும்போது உயிரிழப்பு நேரிடாமல் காத்துக்கொள்ள முடியும் எனும் புரிதல் மக்கள் அனைவருக்கும் ஏற்படவேண்டும். இதுகுறித்து, குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. நடமாடும் முகாம் மூலம் நாளொன்றுக்கு 80 முதல் 100 போ் வரை பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்படுகிறது. எனவே, பரிசோதனைக்கு மாதிரி அளிப்பதற்கு யாரும் தயங்கத் தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT