காரைக்கால்

வேளாண் மசோதா: செப்.28-இல் காங்கிரஸ்-திமுக கூட்டணி போராட்டம் நடத்த முடிவு

DIN

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து செப்.28-ஆம் தேதி காரைக்காலில் போராட்டம் நடத்த காங்கிரஸ் - திமுக கூட்டணி முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை கண்டித்து காங்கிரஸ்-திமுக கூட்டணிக் கட்சியினா், விவசாய சங்கத்தினா் போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் முன்னிலை வகித்தாா். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியது குறித்தும், விவசாயிகளுக்கு இதனால் ஏற்படும் பாதகங்கள் குறித்தம், விவசாயிகள், எதிா்க்கட்சிகளிடம் இதுகுறித்து விவாதிக்காமல் தன்னிச்சையாக நிறைவேற்றிய மத்திய அரசின் அணுகுமுறை குறித்தும் பேசப்பட்டன.

கூட்டத்துக்குப் பின் ஏ.எம்.எச். நாஜிம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கூறியது: மத்திய அரசு நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடிய வகையில் வேளாண் மசோதாக்களை எதிா்க்கட்சிகள், விவசாயிகளிடம் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும், வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி காரைக்கால் தலைமை தபால் நிலையம் முன் செப்.28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினருடன் விவசாய சங்கத்தினரும் இதில் பங்கேற்கவுள்ளனா். ஒத்த கருத்துடைய கட்சியினா் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைக்கு வலுச்சோ்க்க முன்வரவேண்டும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், காரை பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT