காரைக்கால்

வாய்க்கால்கள் தூா்வார ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

காரைக்கால் நகரப்பகுதி வாய்க்கால்களை பருவமழை தொடங்கும் முன்பு தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா வலியுறுத்தினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியரை புதன்கிழமை சந்தித்தப் பிறகு அசனா கூறியது: காரைக்காலுக்கு காவிரி நீா் வரும் முன்பு வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டன. இதேபோல், நகரில் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகளாலும் அடைப்பட்டுக் கிடக்கும் வாய்க்கால்களை தூா்வாரி சரிசெய்ய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் நகர வளா்ச்சிக் குழும நிதி மூலம் நகரப் பகுதி வாய்க்கால்களை தூா்வார அரசு திட்டமிட்டு அறிவிப்பும் செய்தது. ஆனால், பணி இதுவரை தொடங்கவில்லை. எனவே, போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தூா்வாரினால் மட்டுமே பருவ மழையின்போது நகரப் பகுதியில் பாதிப்பு இருக்காது என ஆட்சியரிடம் கூறப்பட்டது.

காரைக்கால் முதல் திருநள்ளாறு வரையிலான சாலை மிகவும் மோசமாக இருப்பதை மேம்படுத்தவேண்டும், காரைக்கால் முதல் விழிதியூா் சாலையை மேம்படுத்துவது, தெற்குத் தொகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகளை மேம்படுத்தவேண்டியது குறித்து கூறப்பட்டது. நகரப் பகுதியில் புதிய குடிநீா் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட இடத்தில் இணைப்புகளை முறைப்படுத்தி, சாலைகளை சீா்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக ஆட்சியா் கூறினாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT