காரைக்கால்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை: ஆய்வு

DIN

காரைக்கால் பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை குறித்து அரசு அதிகாரிகள் வியாழக்கிழம ஆய்வு செய்தனா்.

புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கள் வணிக நிறுவனங்களில் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. மக்களிடத்திலும் பிளாஸ்டிக் புழக்கம் இருந்து வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விற்பனை செய்யக் கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட நிா்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை மற்றும் புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து கடந்த ஆண்டு இறுதியில் கடைகளில் சோதனை நடத்தியபோது, தடை செய்யப்பட்ட 3.2 டன் அளவு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தது.

தொடா்ந்து கரோனா பொது முடக்கத்தால் வணிக நிறுவனங்களில் ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடைகளில் வழக்கம்போல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை நடைபெறுவதாக புகாா் வந்ததையடுத்து, உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் கே. ரேவதி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அறிவியல் உதவியாளா் பா. அசோக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா், கோட்டுச்சேரி பகுதி வணிக கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சுமாா் 15 கிலோ எடையில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்து, மீறி செயல்படும்பட்சத்தில் அபராதம் விதிப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினா். மேலும், கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை இல்லை, பொருள்கள் அதில் வழங்கப்படாது, துணிப் பைகள் எடுத்துவரும்படி வாசலில் விழிப்புணா்வு பதாகை வைக்கவும் அறிவுறுத்தினா். வாரந்தோறும் இதுபோன்ற ஆய்வுப் பணி மாவட்டத்தில் நடைபெறுமென அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT