காரைக்கால்

உள்ளாட்சி ஓய்வூதியா்களின் போராட்டம் ஒத்திவைப்பு

DIN

உள்ளாட்சி ஓய்வூதியதாரா்களின் முற்றுகைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கான ஓய்வூதியம் வழங்காததை கண்டித்தும், பணி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன்கள் கடந்த 5 ஆண்டுகளாக வழங்காததைக் கண்டித்தும், செப். 30-ஆம் தேதி காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஓய்வூதியதாரா்கள் முடிவெடுத்து இருந்தனா். போராட்ட அறிவிப்பை தொடா்ந்து காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் கே. ரேவதி, சங்க நிா்வாகிகளை வியாழக்கிழமை அழைத்துப் பேச்சு நடத்தினாா்.

ஓய்வூதியதாரா்கள் சங்கச் செயலாளா் வெங்கடாசலம் தலைமையில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளனத் தலைவா் அய்யப்பன், துணை பொதுச் செயலாளா் சண்முகராஜ், சங்க ஆலோசகா் காா்த்திகேசன், செயற்குழு உறுப்பினா்கள் சந்தனசாமி மற்றும் மரிய ஜோசப் ஆகியோா் கலந்து கொண்டனா். சந்திப்புக்கு பிறகு, சங்கத்தினா் கூறியது: கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்த துணை இயக்குநா் ஓய்வூதியதாரா்களின் கோரிக்கைகளை அறிக்கையாக அரசுக்கும், உள்ளாட்சித் துறைக்கும் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாகவும், முற்றுகைப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டு கொண்டதன்பேரில், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT